Monthly Archives: August 2018

கலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு “Superstar – மீத்திரன் முக்கிளை”

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்க்கு Superstar – மீத்திரன் முக்கிளை என்ற தலைப்பை பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Read More »

கபிலன்வைரமுத்துவின் தனிப்பாடல் தலைப்பு இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார்

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து உருவாக்கத்தில் டி.ராஜேந்தர் பாடி பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கும் பாடலின் தலைப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். பாடலுக்கு “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக கபிலன் வெளியிட்ட குறிப்பில் “இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய அஞ்சலி படத்தின் இறுதிக் காட்சியில் மரண உறக்கத்தில் இருக்கும் தன் சகோதரியை எழுப்ப முயற்சிக்கும் சிறுமியின் கதறல் வார்த்தைகள்தான் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு. மது மயக்கத்தில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை எழுப்ப முயற்சிக்கும் ...

Read More »

“வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி

சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி ...

Read More »

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சீ.வி.குமார் தயாரிக்கும் ஜாங்கோ இன்று படப்பிடிப்பு துவங்கியது

  தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார். ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ...

Read More »

கேரளா நிவாரண நிதிக்கு காட்டு பய சார் இந்த காளி இலவசமாக திரையிடப்பட்டது

சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் நேற்று (26ம் தேதி) காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சி ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் உண்டியலில் இருந்த அனைத்து தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்துவதாக தெரிவித்தார்.

Read More »