தமிழ் செய்திகள்

ஜனவரி 5ம் தேதி முதல் “சாவி”

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் “சாவி” திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது. ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். “சாவி” திரைப்படத்தின் இயக்கனர் இரா.சுப்பிரமணியன். ஜனவரி 5ம் தேதி இப்படம் ...

Read More »

கவிப்பேரரசு வைரமுத்து அறிக்கை

வணக்கம். பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன். உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. ...

Read More »

Actor Vasanth Ravi Thanks Letter

நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன். என் சினிமா ...

Read More »

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்

பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார். தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப்படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தமிழில் ...

Read More »

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல் – தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடிய பிரியாங்கா

தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் ...

Read More »

கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்

வடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ? பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ? என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது. நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன. விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன. ஒக்கி ...

Read More »

நாளைய இயக்குநர் (NAALAYA IYAKKUNAR) – Tamil Short Film and Details

நடிகர்கள் கதபாத்திரம் பெயர் – நடிகர் பெயர் கார்த்திக் – முத்துகுமார் இயக்குநர் ஸ்ரீராம் – A.P.ஸ்ரீதர் NRI தயாரிப்பாளர் – யோகேஷ் கிருஷ்ணா கார்த்திக் நண்பன் – சிவ குமார் ராமமூர்த்தி மீடியேட்டர் – ‘ஒற்றன்’ துரை ஷங்கர் நிருபர் – சு செந்தில் குமரன் வாரிசு நடிகர் – ஷேக் முண்ணனி நடிகர் – அரவிந்த் ஹரி – ஆதித்யா சிவகுமார் முதல் தயாரிப்பாளர் – பார்த்திபன் சன்ராஜ் இரண்டாம் தயாரிப்பாளர் – தேவ் குரு டிவிடி நண்பர் – ராஜா ...

Read More »

Actor Prasanna Press Release

வணக்கம் ! கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “திருட்டுபயலே 2 ” என்  இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த  “ஜவான்” என்ற திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர்  நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக “5ஸ்டார்” படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து ...

Read More »

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள் பட்டியல் அறிவிப்பு

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் அறம் கடுகு குரங்கு பொம்மை மாநகரம் மகளிர் மட்டும் மனுசங்கடா ஒரு கிடாரியின் கருணை மனு ...

Read More »

Kabilan Vairamuthu On His 2017 Journey – Thanks To Media And Friends Letter

ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பணியில் இருந்து விடைபெற்று தமிழ் திரையுலகில் முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தோட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பயணம் தொடங்கினேன். என் பயணத்திற்கு அர்த்தமுள்ள தொடக்கத்தைத் தந்திருக்கிறது 2017ஆம் ஆண்டு. நல்ல உள்ளங்கள் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மெய்நிகரி என்ற என் நாவல் இயக்குநர் திரு.கே.வி.ஆனந்த் அவர்களின் கவனத்தைக் கவர்ந்ததும் அதுவே ‘கவண்’ என்ற திரைப்படத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததும் நிறைவான ஆரம்பம். திலக் (விஜய் சேதுபதி), அப்துல் (விக்ராந்த்), மலர்(மடோனா), மயில்வாகனன் (டி.ஆர்) என்ற ...

Read More »