தமிழ் செய்திகள்

வெற்றி வேல் விரைவில் வெளியிடப்படும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குனராகவும், ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா ...

Read More »

நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மாயம் காண வாராயோ – களம் படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

அருள் மூவிஸ் தயாரித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடவிருக்கும் படம் களம். தயாரிப்பாளர் சுபீஷ் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கிறார். ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல ஒரு பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் ...

Read More »

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் குகன் ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர். “வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம்தான் “குகன்”. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான ...

Read More »

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கும் புதிய படம்

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை  இயக்கவுள்ளார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா  நாளை காலை 10.30 மணிக்கு ( ஏப்ரல் 3 ) உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் ...

Read More »

பி.சுசீலாவை நேரில் சந்தித்து வைரமுத்து வாழ்த்து

கவிஞர் வைரமுத்து அவர்களின் பேச்சு :- 17595 பாடல்கள் பாடி கின்னஸ் – உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன். எத்தனை மொழிகளில் பாடினாலும், ...

Read More »

இயக்குனர் சசிகுமாரின் நன்றி கடிதம்

பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். மகிழ்ச்சிப் பெருக்கின் பகிர்தலுக்காக இந்தக் கடிதம். எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக ‘தாரை தப்பட்டை’ அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இசைஞானி ராஜா சாரை இந்திய தேசமே கொண்டாடும் சூழலில் ரசிகர்களோடு ரசிகர்களாக நாங்களும் இந்த மகிழ்வில் கலக்கிறோம்; ...

Read More »

இயக்குனர் சமுத்திரகனின் நன்றி கடிதம்

அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம், எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி. 63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரனை படத்திற்க்காக கிடைத்துள்ளது. எனக்கு இவ்விருது கிடைக்க உருதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், விசாரனை படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். விசாரனை படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு விசாரனை படத்திற்காக ...

Read More »

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம்

கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர்  இணையும் புதிய படம். அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது 18ம் தயாரிப்பாக கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணையும் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார்கள். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இப்படத்தை   தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை ...

Read More »

சசிகுமார் நடிக்கும் வசந்தமணி இயக்குனராக அறிமுகமாகும் வெற்றி வேல்

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், R. ரவிந்திரன் தயாரிப்பில், M. சசிகுமார் நடிக்கும் வசந்தமணி இயக்குனராக அறிமுகமாகும் “வெற்றி வேல்” பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் ...

Read More »

காமெடி, செண்டிமென்ட் கலந்து படமாக்கப்பட்டிருக்கு யானைமேல் குதிரை சவாரி

முயற்சி பண்ணாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்”-ங்கிறத மனசுல வச்சுக்கிட்டு ஒரு குரூப் அவங்களால முடியாத காரியத்துக்காக முயற்சி பன்றத காமெடி, செண்டிமென்ட் கலந்து படமாக்கப்பட்டிருக்கு யானைமேல் குதிரை சவாரி. நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், மிப்பு நடித்திருக்கிறார்கள். பாடல்கள் இசை இமாலயன், பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ் குமார். நடனம் பாபி ஆன்டனி, சென்னை, மற்றும் அரக்கோணம், திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து ...

Read More »