தமிழ் செய்திகள்

செல்லி சினிமாஸ் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஷபீரின் இசையில் சகா

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிப்பில், பல முன்னனி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “சகா”. 17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதைகளமாக கொண்ட படம் “சகா” இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீ ராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் ப்ரித்திவிராஜ் முதன்முறையாக ...

Read More »

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் மற்றுமொறு புதியவர்களுக்கான புதிய முயற்சி

எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயல். அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும். பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து பல திறமையான புதியவர்கள் உருவாக்கிய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் வெளியிடவுள்ளது. இதன் முதல் கட்டமாக, ...

Read More »

பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை ஜூலியும் நாலு பேரும் படத்தின் இயக்குநருக்கு உரியது

ரீச் மீடியா சொல்யூஷன் மற்றும் சஹானா ஸ்டுடியோஸ் வழங்கும் “ஜூலியும் நாலு பேரும்”   ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ்.R.V-க்கு இது முதல் படம். தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின், “ஃபர்ஸ்ட் லுக்”-கை தொடர்ந்து, பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை இப்படத்தின் இயக்குநருக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச ...

Read More »

தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை

ஜீவல் ருதேன் பிக்சர்ஸ் “எண்ணம் புது வண்ணம்” மூலக்கதை: எந்த உயிர்களுக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனைகளை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் என்ற கருத்தை தாங்கி வருவதே “எண்ணம் புது வண்ணம்”. படப்பிடிப்பு தளங்கள்: சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர்,         தலை பாலாறு, கனக ...

Read More »

கொள்ளிடம் படத்தின் கதைக்கரு – மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும்

மனித இனத்துல இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம். அழகு குறைவா இருக்குற என்பது சதவிதம் பேர் ஒருதலையாதான் காதலிக்கமுடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் “இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த கொலைக்கு பேர்தான் “கொள்ளிடம்”. இதுவே கொள்ளிடம் படத்தின் கதைக்கரு. டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. நடிகர்கள்: நேசம் முரளி லூதியா ராசிக் வடிவுக்கரசி ராமசந்திரன் வேல்முருகன்   தொழில்நுட்ப ...

Read More »

Ulaganayagan Kamal Haasan Launched Mo Movie Teaser Stills

WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் “மோ” படத்தின் டீசரை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோஸில் இந்நிகழ்வு நடைபெற்றது. டீசரை பார்த்த கமல்ஹாசன், மோ படக்குழுவினரை வெகுவாக பாரட்டினார். இத்திரைப்படத்தில் சன் மியூசிக் வர்ணனையாளர் (VJ) சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த ...

Read More »

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது – கவிஞர் வைரமுத்துவின் கட்டுரை

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம். ஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது. 1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப் படுகிறான். ...

Read More »

வெற்றி வேல் விரைவில் வெளியிடப்படும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குனராகவும், ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா ...

Read More »

நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மாயம் காண வாராயோ – களம் படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

அருள் மூவிஸ் தயாரித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடவிருக்கும் படம் களம். தயாரிப்பாளர் சுபீஷ் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கிறார். ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல ஒரு பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் ...

Read More »

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் குகன் ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர். “வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம்தான் “குகன்”. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான ...

Read More »