தமிழ் செய்திகள்

சேரனின் தெலுங்கு பதிப்பான ராஜாதி ராஜா மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது

இயக்குனர் சேரனின் ராஜாதி ராஜா – “தெலுங்கு” 2016 இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான “ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை“ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “ராஜாதி ராஜா“ கடந்த 24 ம் தேதி தெலுங்கு மாநிலம் முழுவதும் வெளியானது. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியையும், சேரனுக்கு மிக நல்ல பெயரையும் வாங்கி தந்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் இருந்து, இரண்டு முறை தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த படம் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றியை அமைந்துள்ளதை ...

Read More »

இந்த ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

செம்மை வனம் , ஊர்ச் சந்தை, பிரண்டைத்திருவிழா போன்ற அரிய நிகழ்வுகளின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் சிற்ப்பான பணிகள் செய்தமைக்காக ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான ம செந்தமிழன​ அவர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி ,விருது குழுவினர்களான.

Read More »

இறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் C.V.குமார் இயக்கும் “மாயவன்”

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் C.V.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர். அட்டக்கத்தி மூலம் இவர் அறிமுகப்படுத்திய ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று சூப்பர் ஸ்டாரின் கபாலியில் பணியாற்றுவது இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று. தனது ஒவ்வொரு படத்திற்க்குமான திரைக்கதை சிறப்பாக ...

Read More »

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காதலின் பொன் வீதியில்

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காதலின் பொன் வீதியில் கதாநாயகனாக சந்தன் அறிமுகமாகிறார். எண்ணற்ற பல வெற்றிப் படங்களை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக தயாரித்து இயக்கி நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். “காதலின் பொன் வீதியில்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிப்பு கல்லூரியில் பயின்று, நடிப்பிற்கு ...

Read More »

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிப்பில் P.வாசு இயக்கத்தில் சிவலிங்கா தமிழ் மற்றும் தெலுங்கில்

சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கிய P.வாசு, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க புதிய படம் ஒன்றை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஓடிய ஆப்தமித்ரா படம் தமிழில் ரஜினிகாந்த் நடித்து சந்திரமுகி என்ற பெயரில் வெளியாகி 890 நாட்கள் ஓடி புதிய உலக சாதனையை ஏற்ப்படுத்தியது. தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் நடித்த ஆப்தரட்க்ஷகா, ரவிசந்திரன் நடித்த திருஷ்யா படங்களும் பெரும் ...

Read More »

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10)

கால் டாக்சி ஒட்டுனரான ஹீரோ ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை தனது காரில் அழைத்துச் செல்கிறான். பயணத்தின் போது, இருவரும் முரண்படுகிறார்கள். பிறகு ஹீரோ தன்னுடைய ஃபேன் (Fan) என தெரிந்து கொண்ட ஹீரோயின் அன்பாக பேச, அதை ஹீரோ தவறுதலாக புரிந்து கொள்கிறான். இந்த கட்டத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியையும் ஹீரோயினுக்கு ஏற்படுத்துகிறான். ஹீரோவின் இந்த செயல்பாடுகளுக்கு இடையில், சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார் ஒரு சீரியல் கொலை விஷயமாக. இப்படி ஏகப்பட்ட அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை “ஒன்பதிலிருந்து ...

Read More »

தயாரிப்பாளர் ரகுநந்தன் மகன் மைத்திரேயா, இயக்குனர் மிஷ்கின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் துப்பரிவாளன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக 100க்கும் மேற்பட்ட படத்திற்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிப்பில் மைத்திரேயா (Maitreya) என்பவர் இயக்குனர் மிஷ்கின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரேயா லண்டனில் MBA பட்டம் படித்து, மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த ...

Read More »

2016 ஆம் ஆண்டுக்கான பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது அறிவிப்பு

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார். பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு” இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார். சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் ...

Read More »

மீண்டும் அதே கம்பீரத்துடன் நடிகர் நெப்போலியன்

1991ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது நடிப்பில் முத்திரை பதித்தவர் நடிகர் நெப்போலியன் நடிகர், சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெப்போலியன் சில காலம் தீவர அரசியலில் ஈடுபட்ட பின்னர் தற்போது தனது இயல்பான கலையான நடிப்பில் மீண்டும் முழுகவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன், சசிகுமார் தயாரித்து நடிக்கும் கிடாரி, ...

Read More »