இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானின் YM ஸ்டுடியோஸில் எடுக்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் “பேட்ட”

இசையில் பல புதுமைகளை கொடுத்து, ஆஸ்கர் விருதுகளை வென்று இன்றளவும் முன்னனி இசையமைப்பாளராய் திகழ்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான்.

இவர் இசையமைப்பது மட்டுமன்றி சினிமாவின் மற்ற துறைகளிலும் தன்னை முன்னிருத்தி கொள்ள ஆயுத்தமாகி வருகிறார்.

சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானின் A.R.கார்டனில் புதிய தொழில்நுட்பகளுடன் கூடிய YM ஸ்டுடியோஸ் எனும் படப்பிடிப்பு தளத்தை நிறுவியுள்ளார்.

பெரிய 2 படப்பிடிப்பு தளங்கள், கீரீன் மேட் ஸ்டுடியோ என கிட்டத்தட்ட 200 நபர்கள் தங்கி வேலை செய்யுமளவு விலாசமான இடமாக திகழ்கிறது YM ஸ்டுடியோஸ்.

மேலும் இந்த ஸ்டுடியோவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 2.0, பேட்ட படங்களில் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.