எஸ்.ஆர்.நாதன் இறுதி அஞ்சலியில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி  எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதன், தனக்கு எந்த ஊர் சொந்த ஊர் என்று தெரியாது-அதனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதில் ஏதேனும் ஓர்  ஊர் என் சொந்த ஊராக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்படுவதாகக் கவிஞரிடம்  சொல்லியிருக்கிறார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக கலாசார நிலையத்தில்  நிகழ்ந்த இறுதி அஞ்சலியில் அவருக்குப் பிடித்த இந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்ட போது சிங்கப்பூர்த் தமிழர்கள் சிலிர்த்து நின்றார்கள். அந்தக் காட்சி இது.