முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர்

மொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் மேதகு திரு. பரமசிவம்பிள்ளை வையாபுரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி அவர்களின் முத்து விழா (81வது பிறந்த நாள்) வருகிற 21ம் தேதி (21.4.2017) நடை பெறுவதை கேள்விப்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முன் கூட்டியே வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது Dr.கலாநிதி வீராசாமி, திருமதி கஸ்தூரி விராசாமி, Dr. VRS சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.