அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிக்கும் பிரம்மாண்ட படங்கள்

தமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படம் – சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் – ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது படம் – நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த “சதுரங்க வேட்டை” படத்தை தெலுங்கில் “Bluff Master” என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.

முன்றாவது படம் – இளைங்கர்களுக்கு பிடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம்.

நான்காவது படம் – நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற “ஆனந்தோ பிரமா” படத்தை தமிழில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை வரிசைப்படுத்தி தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்கிறார்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Producer Ramesh P. Pillai, the leading financier and distributor who has distributed Super hit films which includes Aranmanai 1 and 2, Bahubali1, Chennai 28 II, is now making mark in Tamil film Industry by producing films on behalf of his Production company “Abhishek Films”

List of Films:

First film – Siddharth, GV Prakash Kumar starring new film directed by director Sasi, who has given several hit films which includes Sollamale, Poo and Pichaikaran. This untitled movie to be produced in bilingual (Tamil and Telugu). Since two schedules of shooting is already done, the third schedule of shooting in now happening in Chennai.

Second film – Remaking the Box office hit “Sadhuranga Vettai” in Telugu as”Bluff Master”. Satyadev and Nandita plays the Lead Roles.

Third Film – New film to be directed by Adhik Ravichandran. Cast and crew details will be announced soon.

Fourth Film – Blockbuster Telugu movie “ANANDO BRAHMA” is all set to remade in Tamil. Talks with lead heroines is going on to cast in this movie.

Having a lineup of films under his production banner “Abhishek Films”, Producer Ramesh P. Pillai says his motto is to give variety of films that will fulfill fans expectations.

Wishing you all Happy Vinayagar Chaturthi