இசைக்கான உரிமம் சங்கத்தில் செயற்க்குழு உறுப்பினரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் IPRS (Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்க்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் இந்த சங்கத்தின் தலைவராகவும், பதிப்புரிமை நிபுணராண அச்சில் போர்லர் நிரந்தர ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

THE INDIAN PERFORMING RIGHT SOCIETY LIMITED என்று அழைக்கப்படும் IPRS சங்கமானது வணிக இசை பயனர்களுக்கு உரிமங்கள் வழங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக, அவர்களிடம் இருந்து உரிமம் சேகரித்து அதன் மூலம் ஒரு சேவையை அளித்துவருகிறது. இதற்காக அதன் உரிமையாளர்கள் அதாவது ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் மியூசிக் வெளியீட்டாளர்கள் இவர்களிடமிருந்து உரிமையை பெற்று வணிக இசை பயனர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உரிமத்தை வழங்கி பின்னர் நிர்வாக செலவுகள் கழித்தப் பிறகு அதன் உரிமையாளர்களுக்கான ராயல்டியை விநியோகிக்கன்றது.

இந்த சங்கத்தின் தலைவர் ஜாவேத் அக்தர் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து எதிர்காலத்தில் இந்த சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பிரபல பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆஷிஷ் ரேகோ, ராஜீந்தர் பணேசர், அனுபம் ராய், சாஹித்தி சேருகுபல் ஆகியோரும் IPRS (Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்க்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Music Director GV Prakash Kumar is now Member of IPRS

Music composer and the busiest actor GV Prakash Kumar has been elected as one of the members of IPRS (Indian Performing Right Society).

Bollywood’s veteran lyricist and screenwriter Javed Akthar has been appointed as the new Chairman of IPRS. Copyright expert Achille Forler will be the Permanent Advisor.

About IPRS – “The business of IPRS is to issue Licences to users of music and collect Royalties from them, for and on behalf of its Members i.e. the Authors, the Composers and the Publishers of Music and distribute this Royalty amongst them after deducting its administrative costs.”

Along with GV Prakash Kumar, popular singers and musicians including Aashish Rego, Rajinder Panesar, Anupam Roy and Sahithi Cherukupal have also been elected as the members of IPRS.