உதயம்: புதிய ரூ.1000 கோடி கிளப் – பிரபாஸ் அதன் நாயகன்

உதயம்: புதிய ரூ.1000 கோடி கிளப் – பிரபாஸ் அதன் நாயகன்

பாஹுபலி 2ன் நட்சத்திர நாயகன் பிரபாஸ்: வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்திய திரைப்பட நாயகன். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு சரித்திரம்.

பாஹுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது.

இந்த காவிய படைப்பில், அமரேந்திர பாஹுபலியாய் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிபடுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாஹுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

படத்தின் முன்னணி நாயகன் கூறும்போது “மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது. மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபாஸ், ரானா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

There’s a new “1000 Crore Club” and Prabhas is the Hero

Prabhas, the leading actor of Baahubali 2 – The Conclusion, is the first Indian actor to reach Rs 1000 crores – an achievement unlocked in less than 10 days of the movie’s release.

Baahubali 2 had domestic collections of Rs 800 Cr and overseas collections of Rs 200 Cr on Day 9 of its release. The movie opened to a collection of Rs 121 crores, and has continued its streak henceforth.

The movie has earned Prabhas more fans across the world, who are celebrating his impeccable performance as Amarendra Baahubali in the epic movie.

Baahubali 2 – The Conclusion has broken across language barriers. Prabhas thanked all his fans & Director, S S Rajamouli, for the incredible success of the movie.

Prabhas, the lead actor of the movie, said, “To All My Fans , a big hug to each one of you for all the love that you’ll have showered on me. I have tried my best to go through a lot of the efforts that you all have put to express your affection for me from different parts of India and even overseas. I am truly overwhelmed with everything. The journey of Baahubali has been a long one but among the few things that I will take away from this, is all of you. Lots of love back to you all. A big thank you to Rajamouli sir for believing in me to carry his huge vision to the masses, giving me a once-in-a-lifetime character of Baahubali and making the entire journey so special.”

The movie, directed by S S Rajamouli, stars Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannaah Bhatia, Ramya Krishnan and Sathyaraj.