வெற்றிக்கூட்டணி சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது.

“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.

இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

On behalf of Sundhari Films, M.Gnana Sundhari produced Blockbuster Movie “Adithadi” on 2004 starring Sathyaraj, directed by Shivraaj. This movie created a huge waves on Kollywood and made good money in Box Office.

Now the successful combo Sundhari Films – Sathyaraj – Shivraaj is back again for a new movie “Cinema Nadiganum Arasiyalvaadhiyum”.

This Political Satire movie talks about an actor who is willing to enter into politics and its after affects of his impact in politics.

“Cinema Nadiganum Arasiyalvaadhiyum” to be produced in a huge budget by Sundhari Films, M.Gnana Sundhari. Director Selvabharathi is taking care of Story and Dialogues. Director Shivraaj will be penning Screenplay and directing this movie.

This movie to be made as trillingual (Tamil, Hindi and Telugu) and notably this is the first outing in Bollywood for Sundhari Films – Sathyaraj – Shivraaj Combo.

Shoots are planned to start from April and Other Cast Crew details will be officially announced by Production Department Soon.