The Iron Lady Press Release – Tamil and English

பத்திரிகை, ஊடகம் மற்றும் அனைத்து இந்திய சினிமா ஆர்வலர்களும், வணக்கம்.

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் “அம்மா” செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே “பரதநாட்டியம்” மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இந்த களத்தில் 50 சதவீதவெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் “உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்”. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.

நன்றி,
அன்புடன்
ஆ.பிரியதர்ஷினி.

Press, Media and all Indian cinema enthusiasts,

I have been getting a lot of questions about the status of the movie The Iron Lady. I’m duty bound to answer your queries as the director of the film. While you may already know some of the facts discussed here, I place them before you again to comprehensively answer all the questions I have been asked recently. The film The Iron Lady spans over six decades covering the entire life story of former Chief Minister of Tamil Nadu,Selvi. J. Jayalalithaa, who was lovingly addressed by the people of TamilNadu as “Amma.”

The most charming and vivacious actor Ms. Nithya Menen is to play the lead role of Amma J. Jayalalithaa, in the movie. After carefully listing out the different aspects that the role demands, Nithya Menen was shortlisted as the perfect cast for the role of Amma. From sharing similar facial features to emanating a graceful and charming personality, Nithya Menen naturally embodies many personality traits that Amma herself exhibited. She has the iron will that Amma had and can speak six languages fluently just the way Amma could. She, like Amma is also trained in Bharathnatyam and vocal carnatic music since childhood.

The most challenging aspect of a biopic is inintroducing it to the audience. Perhaps even more so than the making of it. While biopics are commonly viewed as a breeding ground for both absolving as well as raising more problematics, controversies and criticisms there are many procedural aspects to introducing its production stages to the public. Right from scaling the subject, cast confirmation and character reveal to acknowledging and authenticating the source of information in an ethical manner the challenges that are posited before a director are so many. Biopic is a challenging genre as it has scope to cater to expectations of larger audience groups. The script of a biopic demands a lot of effort and careful planning as it must fulfill several criteria. To have a proper reach, a biopic must be critically acclaimed, objective in its standpoint while representing multiple points of view and should also be a commercial success. Sir Richard Attenborough spent 18 years to shape the biopic Gandhi. I strongly believe that such devout preparations and well planned execution is the need of the hour when it comes to directing a biopic.

Casting plays almost 50 percent of the role in pitching a biopic to the audience. Therefore, I wouldn’t compromise on the casting choices at any rate. Only a perfect casting team can help each other in building the narrative of a biopic and at the same time bring to life on screen the essence of their real-life counterparts. There is a huge responsibility that lies ahead of me to meet all of these quality demands. I have acquired a clear vision of my path and have gained more strength and courage by studying, research and travelling along with the characters of this film and make the impossible, possible.

The Iron Lady consists of many technical departments operating synchronously towards exploring our creative potential and at the same time refrain misrepresenting that real facts. I’m awaiting dates confirmation from two of the main character cast of the film. The cast characters’ reveal is sure to be an interesting and exciting one and definitely worth the wait! It is necessary to wait to fully understand the logic and reason behind the timing of the reveal. I can assure to those to raise many questions and concerns about updates on the movie, that your palpable excitement and expectations are sure to be satiated with each andevery step that we are to take and consequently revealto all.

Thanking You.

Yours truly,

A Priyadhaarshini