Zee5 Launches Fingertip – A Social Media Thriller Featuring Akshara Haasan

*விஷ்ணு வர்தன்  தயாரிப்பில், அக்ஷரா ஹாசன் நடிப்பில், சமூக ஊடகத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும்ஃபிங்கர்டிப்

திரில்லர் இணையத் தொடர் ஆகஸ்ட் 21ல் ZEE5ல் வெளியீடு*

சமூக வலைதளத்தின் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக் கொண்ட இந்த தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி இணையத்தில் வெளியிடப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 21, 2019:

இந்தியாவின் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTT) தளமான ZEE5ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான திரவம், ஆட்டோ சங்கர் ஆகியவற்றை தொடர்ந்து, மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் ‘ஃபிங்கர்டிப்’ எனும் திரில்லர் தொடர் வருகின்ற 21ம் தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணு வர்தன் தயாரிப்பில், சிவாகர் இயக்கத்தில், 5 எபிசொடுகளைக் கொண்ட இந்த சமூக ஊடக திரில்லர் தொடரில், அக்ஷரா ஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் பிரத்யேகமாக ZEE5 தளத்தில் வெளியாகிறது.

‘ஃபிங்கர்டிப்’ எனும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலைதள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடும் என்பதையும், அவர்களது சௌகரியங்களைவிட்டு நகர்த்தி, ஒரு தாளமுடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும், மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு ஆப்புடன் ஒப்பிடக்கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ஆப்பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அக்ஷரா ஹாசன் பேசும் போது, ‘பல தரமான அசலான தமிழ் படைப்புகளை உருவாக்கி வரும் ZEE5 உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நடிக்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்.’

இத்தொடரின் இயக்குனர் சிவாகர், ‘அசலான, புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இந்த காலச்சூழலில், அதன் முன்னோடியாக திகழும் ZEE5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பரபரப்பான திரில்லர் தொடரான ‘ஃபிங்கர்டிப்’, உங்களை வெகுவாக ஈர்க்கும், யோசிக்க வைக்கும், அதே சமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்”

அபர்ணா அசரேகர், தலைவர், நிகழ்ச்சிநிரல் ZEE5, ‘சமூக வலைதளத்துடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் நாம் அனைவருமே அதனுடைய எண்ணிலடங்கா நன்மைகளை அனுபவித்து வருகிறோம். ஆயினும் அதன் ஊடுருவும் தன்மையும், ஆளுமையும் சில எதிர்மறை பயன்களையும் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு கதையான ‘ஃபிங்கர்டிப்’ மிகவும் விறுவிறுப்பாக, ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் முந்தைய அசல் தமிழ் நிகழ்ச்சிகள் தனித்துவமான வரவேற்பினை பெற்றிருக்கும் நிலையில் இந்தத் தொடருடன் எங்கள் பிராந்திய மொழி நிகழ்ச்சிப் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவோம் என்று நம்புகிறோம்’

ZEE5 ஊடக தொடர்பான கேள்விகளுக்கு:

ரோகன் அரோரா | +91 9820432753 | Roha.vora@pprww.com

அகான்க்ஷா ஜானி | +91 9808340662 | akanksha.jani@pprww.com

ரோனில் பூரணி | +91 9820962395 | Ronil.purani@pprww.com

ZEE5, உலகளாவிய பறந்து விரிந்திருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி, ஊடக குழுமமான  ZEE எண்டர்டைன்மென்ட் எண்டர்ப்ரைஸஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணையதள பிரிவு. ZEE5 ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில், 80 க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சேனல்கள், மற்றும் 1 லட்சம் மணி தேவைகேற்ற நிகழ்ச்சிகளை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது.

இத்தளம், அசல் பிராந்திய மொழி நிகழ்ச்சிகளையும், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், நாடகங்கள், நேரலை மற்றும் உடல்நலம் – சுகாதாரம் ஆகிய வாழ்க்கை முறை சார்ந்த நிகழ்சிகளை வழங்கி வருகிறது. மேலும் ZEE5, 11 தேடு மொழிகளில், நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்யத்தக்க வசதி, வாய்மொழி தேடல் மற்றும் தடையற்ற காணொளி பின்னணியை தன் வசம் கொண்டிருக்கிறது.